எமது தொன்போஸ்கோ பேறுபெற்றோர் சமூக நல மையம், பல்வேறு பிரிவுகளாக தன் மனிதநேயச் சேவைகளை, சிறப்பாக செய்கிறது.
- ஒற்றைப் பெற்றோர் மற்றும் பெற்றோரில்லா, 100 அனாதை பிள்ளைகளின் உணவிடமாக, உறைவிடமாக, கல்வித்தரும் பள்ளியாக, அனைத்து அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் இனிய இல்லமாக, அன்பைப் பகிரும் அன்பகமாக இருக்கிறது சாவியோ சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் நிர்மலா சிறுமிகள் இல்லங்கள்.
- எமது தொன் போஸ்கோ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை, ஏறக்குறைய 521 சிறுவர்கள், 495 சிறுமிகள் மற்றும் 650 ஏழை மாணவர்கள், 650 ஏழை மாணவிகளுக்கு அறிவூட்டி, வழிக்காட்டி, வாழ்வில் அஞ்சாமையுடனும், நேர்மையுடனும், உலகை எதிர்கொள்ள, தேவையான முழுமையான கல்வியை வழங்குகின்றன.
- எங்கள் புனித தாமஸ் முதியோர் இல்லம், 45 ஏழ்மையான வயதான கைவிடப்பட்ட பெண்கள், மற்றும் 15 ஏழை முதிய ஆண்களை அரவணைத்து, உணவு, உறைவிடம் முதல், அனைத்து தேவைகளையும் வழங்கி, அவர்களுக்கு அமைதியான வாழ்க்கையை தருகிறது. இந்த முதியோர் இல்ல சேவையோடு இணைக்கப்பட்டுள்ள, ரூவா பகல்நேரப் பராமரிப்பு மையத்தில், ஏழை முதியவர்கள் தினமும் பகல்நேரத்தில் தங்கி, மதியஉணவு உண்டு மாலையில் தங்கள் வீடு திரும்புகின்றனர்.
- தொன்போஸ்கோ பேறுபெற்றோர் சமூக நல மையத்தின், WHEAT எனப்படும் பெண்கள் நலவாழ்வுக் கல்வி, ஊக்கமூட்டல் மற்றும் பயிற்சி திட்டம், மகளிர் சுய-உதவிக் குழுக்களை உருவாக்கி, சுயமாக தொழில் செய்து பணமீட்டவும், தங்கள் குடும்ப செலவுகளை எளிதில் மேற்கொள்ளவும், அவர்களின் சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய, தலைவர்களாக அவர்கள் மாறவும், பெண்களுக்கு பயிற்சி அளிகிறது. இந்த WHEAT அமைப்பில் 2500-க்கும் மேற்பட்ட பெண்கள், 230 சுய உதவிக்குழுக்களில், உறுப்பினர்களாக இருந்து, தங்கள் சிறப்பு திறனை வெளிப்படுத்தி, சுயமாக சம்பாதிக்கின்றனர்.
- வளரிளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள், சுதந்திரமாக செயல்பட்டு, அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும், திருப்பதியான பொருளாதர வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்த, எமது முறைசாரா தையல் பயிற்சி நிறுவனம், தையல் கலையை கற்க, வசதிவாயப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இன்றைய கணினிகள் மற்றும் தொழில்நுட்ப உலகில், தட்டச்சு செய்வது, அத்தியவசியமான பணியாக உள்ளது. எங்கள் தட்டச்சு பயிற்சி நிறுவனம், 80 ஏழை மாணவ-மாணவிகளுக்கு, தட்டச்சு பயிற்சியளித்து, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட, சான்றிதழ் படிப்பை வழங்குகிறது.
- தொன் போஸ்கோ பேறுபெற்றோர் இளைஞர் மையம், இளைஞர்களுக்கான ஒன்றிணைப்பு இடமாகும். இங்கு அவர்கள் கால்பந்து, டேபிள் டென்னிஸ், கேரம்ஸ் விளையாட்டுகள், இசை, நல்லொழுக்கம் மற்றும் பிற திறன் வளர்ப்பு நடவடிக்கைகளில், ஈடுபடுகிறார்கள். 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இந்த வசதிகளைப் பயன்படுத்தி பயனடைகின்றனர்.
- தொன் போஸ்கோ பேறுபெற்றோர் மையத்தைச் சுற்றியுள்ள, 620-க்கும் மேற்பட்ட கத்தோலிக்க குடும்பங்களுக்கு, ஆன்மஉணவை, இறைவழியை, மறைவாயிலாக தந்து, ஆன்மீகப்பணியை செய்துவருகிறது, எமது ஆறுதல் அன்னை பங்குத் தளம்.
- தொன் போஸ்கோ பேறுபெற்றோர் மைய வளாகத்தில், அமைந்துள்ள புனித கமிலஸ் மருத்துவகம், சுற்றியுள்ள ஏழை எளியவர்களுக்காக தினமும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கிறது. இதில் ஒரு சலேசிய அருட்சகோதரி செவிலியராக பணிப்புரிகிறார்.
- 75 ஏழைக் குழந்தைகளை மாலையில் படிக்க வைத்து, உதவிகள் செய்கிறது எங்கள் இரண்டு மாலைநேர படிப்பு மையங்கள். வீட்டில் படிக்க வசதியில்லாத அக்கம் பக்கத்திலுள்ள ஏழைப் பிள்ளைகள், இங்கு மாலைவேளயில் படிக்கின்றார்கள். அவர்களைக் கவனிக்கும் ஆசிரியர்கள் அவர்களுக்கு உதவுகிறார்கள்.
- வேலைக்கு செல்லும் பெற்றோர்கள், தங்கள் சிறுக்குழந்தைகளை எம் தொன் போஸ்கோ மழலையர் பகல்நேரக் காப்பக மையத்தில், விட்டுச்செல்கிறார்கள். இந்தக் குட்டி குழந்தைகளை சலேசிய அருட்சகோதரியும் ஆசிரியர்களும் நன்கு கவனித்துக் கொள்கிறார்கள்.
- மறைந்த அருட்தந்தை மந்தோவானி அடிகளார் கல்வித் உதவி திட்டம் ஏழை மாணவ-மாணவிகள், பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தங்கள் படிப்பை மற்றும் மேற்படிப்பை, தொடர்ந்து படித்து முடிக்க உதவியாக இருக்கிறது.
உங்களிடம் இருப்பதில் பிறருக்கு கொடுத்து உதவுவது உங்கள் வாழ்விற்கு நல்லது, ஏனென்றால், கொடுப்பது உங்களுக்கு ஒரு நோக்கத்தைத் தருகிறது. உங்களிடம் நோக்கம் சார்ந்த வாழ்க்கை இருக்கும்போது, நீங்கள் ஒரு மகிழ்ச்சியான நபராக இருப்பீர்கள்.